சாயம் போகாத கட்சி திமுக… ஒரு வருடத்தில் எத்தனை திட்டங்களை திமுக செயல்படுத்தியிருக்குனு பாருங்க : ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 11:43 am
Minister KN Nehru - Updatenews360
Quick Share

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்ப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்- கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் அமைக்கும் திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.

திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தங்கு தடையின்றி வந்து செல்லும் வகையில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று பஞ்சப்பூரில் துவக்கி வைத்தார்.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக துவக்கப்பட்டது, அதே போல் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, அப்துல் சமது, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,
மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு , பஞ்சப்பூரில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த மதீப்பீடு 349.98 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது.

அடுத்த ஒரே ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் அடுத்த நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்.
அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை ரூ.966 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிகள் இனி நடைபெற்று உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கும்.

நகர்பதிகளில் சாலை அமைக்கும் திட்டம் : மழையின் காரணமாக சில இடங்களில் தாமதம் ஏற்படுவது உண்மை தான்.

மழைக்காலங்களில் திமுகவின் சாயம் வெளுக்கிறது என்று ஜெயக்குமார் கூறியதற்கு :
சாயம் போகாத கட்சி திமுக என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்பதனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 385

0

0