கொடைக்கானல் ஏரி அருகே கிடந்த மனித எலும்புக்கூடு : அதிர்ச்சியில் மக்கள்!!!!

14 July 2021, 5:34 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள ஜிம்கானா பகுதியில் அறிவியல் அரங்கத்தில் இருந்து மாதிரி மனித எலும்புக்கூடுகள் வெளியே வீசப்பட்ட சம்பவம் கொடைக்கானல் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி அருகே உள்ள ஜிம்கானா பகுதியில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் அந்த இடத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் ஏராளமானோர் குவிந்தனர். மனித எலும்புக்கூடுகள் வடிவில் இருப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த எலும்புக்கூடுகள் அறிவியல் அரங்கத்தில் இருந்து வீசப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் விசாரணையில், அதே பகுதியில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியிலிருந்து அறிவியல் அரங்கத்தில் உபயோகப் படுத்தப் பட்டிருந்த அந்த எலும்புக்கூட்டை குப்பையோடு குப்பையாக சேர்த்து வீசி உள்ளது தெரியவந்தது. நகர் பகுதியில் திடீரென்று எலும்புக்கூடுகள் இருப்பதாக வெளியான தகவல் கொடைக்கானல் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 179

0

0