மனைவியை அரை நிர்வாணப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் : தட்டிக் கேட்டவர்களை நாய்களை விட்டு கடிக்க வைத்த கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2022, 4:22 pm
Dog Bites-Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் பக்கத்து வீட்டுக்காரர்களை நாய்களை வைத்து கடிக்க வைத்த ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை கெம்பண்ணன் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி செந்தாமரைச் செல்வி (வயது 45).இவர் குடும்பத்துடன் ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் ஆந்திராவில் வசித்து வருவதாகவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை இங்கு வருவதும் வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு உதயகுமாருக்கும் அவரது இரண்டாவது மனைவி சந்திரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். மேலும், உதயகுமார் தனது மனைவியை அரை நிர்வாணமாக்கி வீட்டிலிருந்து வெளியே துரத்தியுள்ளார். இதைப்பார்த்த செந்தாமரைச் செல்வி தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த உதயகுமார் தன் வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களை வைத்து அவரது மகள் நிவேதா மற்றும் அருகில் வசிக்கும் லத்திகா, அவரது உறவினர் உள்ளிட்ட மூவரையும் நாயை விட்டு கடிக்க வைத்துள்ளார்.

இதுகுறித்து செந்தாமரைச் செல்வி சிறுமுகை காவல் ஆய்வாளர் வேளாங்கண்ணி உதய ரேகாவிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உதயகுமாரை கைது செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 527

0

0