கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு: சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார்

3 July 2021, 5:59 pm
Quick Share

திருச்சி: வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள கணவனுடன் சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார் அளித்துள்ளார்.

நாகை மாவட்டம், அந்தணப்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நிவேதிதா. கடந்த, 2019ம் ஆண்டு, இவருக்கும், திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, சீர் வரிசையாக 18பவுன் நகைகள், 2கிலோ வெள்ளிப் பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கடந்த வருடம் தலைத் தீபாவளிக்கு தனக்கு கூடுதலாக நகைகள் வேண்டும் என கேட்டு சந்தோஷ்குமாரின் தாயார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பமடைந்த நிவேதிதா வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக நாகப்பட்டினத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்களாகியும், சந்தோஷ்குமார் குழந்தையை, நிவேதிதாவை பார்க்க வரவில்லை.

போனிலும் தொடர்பு கொண்டபோது பேசவில்லை, தொடர்ந்து அவரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து சந்தோஷ் குமாரின் தாயாரின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, எனது மகனுக்கு உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா தனது குடும்பத்துடன் திருச்சி வந்து தனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து மூன்று முறை காவல் நிலையத்திற்கு நேரில் சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து இன்று திருச்சியில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தில், நிவேதிதா தனது ஐந்து மாத கைக்குழந்தையுடன் வந்து புகார் அளித்தார்.

Views: - 85

0

0