“எப்ப பார்த்தாலும் செல்போனில் பிசி“ : பிள்ளைகள் கண்முன்னே தந்தையால் தாய்க்கு நேர்ந்த விபரீதம்!!

22 January 2021, 1:15 pm
Husband kills Wife - Updatenews360
Quick Share

திருச்சி : செல்போனில் மனைவி தொடர்ந்து வேறொருநபருடன் பேசிக்கொண்டே வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் குழந்தைகளின் கண்முன்னே மனைவியாக கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள செங்குளத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசீலன் (வயது 27) புரோட்டா மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜேஸ்வரி (வயது 22) என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 5 வயதில் சாய் பிரசாத் என்ற மகனும் 2 வயதில் கவிநிலா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதமாக ராஜேஸ்வரி அடிக்கடி யாருடனே தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை கவனித்த தவசீலன் மன்னார்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.

ராஜேஸ்வரி மறுக்கவே அடிக்கடி கணவன் மனைவிக்கு இடைபே தகராறு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தவசீலன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அருகில் குடியிருக்கும் ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா இருவரையும் சமாதானம் செய்துள்ளார். பின்னர் இருவரும் தூங்க சென்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் சகுந்தலா விடியற்காலை துணி துவைப்பதற்காக வெளியே வந்த போது, ராஜேஸ்வரி வீட்டில் இருந்து பாடல் சத்தம் அதிக அளவில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் வீட்டின் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்த அவர் கதவைத் திறந்து பார்த்த பொழுது தரையில் ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது தாயை தந்தை கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்ததாகவும் மகன் சாய் பிரசாத் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தவசீலனை தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0