‘மனைவியின் கல்லறை அருகில் என்னையும் புதையுங்கள்’ : மனைவி இறந்த சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவர் தற்கொலை

7 May 2021, 3:06 pm
husband suicide - updatenewsw360
Quick Share

கன்னியாகுமரி : மனைவி இறந்த சோகத்தில் கணவன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி சாருதா (35). இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. சாருதா உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் திடீரென உடல்நிலை கவலைக்கிடமாக இருந்துள்ளது. பின்னர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் மனமுடைந்த கணவர் பரமசிவம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில்,”எனது மனைவியை புகைக்கும் இடத்தின் அருகில் என்னையும் புதைத்து விடுங்கள்,” என கூறப்பட்டிருந்தது. மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 82

0

0