தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன் : காரணத்தை கேட்டு ஷாக் ஆன போலீசார்.. பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 5:23 pm
Sathy Wife Buried -Updatenews360
Quick Share

ஈரோடு : பவானிசாகர் அருகே மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைத்த முதியவரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் பவானிசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரியகள்ளிபட்டி பகுதியில் உள்ள ஓலைக்காரன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவருடைய மனைவி துளசி மணி. இவர் கணவர் ஆறுமுகத்துடன் ஓலைகாரன்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தோட்டம் உள்ளது. வீட்டில் கணவனும் மனைவியும் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக துளசிமணியை காணவில்லை. நேற்று முன்தினம் ஆறுமுகத்தின் விவசாய தோட்டத்தின் வழியாக சிலர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனே அருகில் உள்ள பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சக்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் பவானிசாகர் போலீசார் ஆகியோர் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

விசாரணையில், மனைவி துளசிமணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்து வந்ததும், கடந்த 16ம் தேதி அன்று அவர் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து இறந்தார் என்றும் விசேஷ தினத்தன்று தனது மனைவி இறந்ததால் ஊருக்குள் அடக்கம் செய்ய யாரும் விட மாட்டார்கள் என நினைத்து தோட்டத்தில் சிறிய குழி தோண்டி மண்ணைப்போட்டு புதைத்தேன் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் முன்னிலையில் துளசி மணியின் உடலை இன்று தோண்டி எடுக்கப்பட்டு பின்னர் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் துளசிமணி கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமா என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து இதைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 332

0

0