காதல் மனைவியை கதற கதற கொன்ற கணவன் : தென்காசி அருகே நடந்த கோர சம்பவம்!!

8 April 2021, 8:52 am
Husband Kills Wife -Updatenews360
Quick Share

தென்காசி : காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் 3 வருடத்திற்கு முன் மல்லிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகோபால் தென்காசியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார்.

அதே போல மல்லிகா பொன்ராஜ் என்பவரின் கேபிள் அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையல் நேற்று மாலை திடீரென கேபிள் அலுவலகத்திற்குள் வந்த ராஜகோபால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மல்லிகாவை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த மல்லிகா சரிந்து விழுந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்து தடுக்க வந்தது பக்கத்து வீட்டு பெண்ணையும் ராஜகோபால் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மல்லிகா உயிரிழந்த நிலையில், ஆபத்தான் நிலைமையில் பக்கத்து வீட்டுப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 0

1

0