அரசு பேருந்து நடத்துநருக்கு சரமாரி அடி : படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர்களை கண்டித்ததால் வெறிச்செயல்!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2021, 10:59 am
சென்னை : ஆவடி அருகே படிகட்டில் பயணம் செய்தவ இளைஞரை உள்ளே வந்து அமர வலியுறுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துரை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி பேருந்து பணிமனையில் நேற்று இரவு பூந்தமல்லியில் இருந்து ஆவடி வழியாக செங்குன்றம் நோக்கி தடம் எண் 62 என்ற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் ஓட்டுநராக பொன் ஆதித்யா கரிகாலன் (வயது 34), நடத்துநராக குபேரன் (வயது 43) ஆகியோர் இருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேருந்தின் கதவுகளை மூடுவதற்காக ஓட்டுனர் அந்த இளைஞரை உள்ளே வந்து இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு செவிசாய்க்காத இளைஞர் ஓட்டுனர் நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செல்லும் வழியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது . இதனிடையே பேருந்தை தொடர்ந்து வந்த இளைஞர் சக நண்பர்களை தொடர்பு கொண்ட இளைஞர் திருமுல்லைவாயல் பகுதியில் பேருந்தை வழிமறித்துள்ளார்.
பேருந்து படிகட்டு வழிக்கதவுகள் மூடப்பட்டிருந்ததால் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஒட்டுநருக்கு வயிற்று பகுதியில் காயமும், நடத்துனருக்கு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் இருத்தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த இளைஞர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின் தாக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். உள்ளே அமர வலியுறித்திய ஓட்டுநர் நடத்துனரை பேருந்தில் வைத்து இளைஞர்கள் இணைந்து அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
0
0