ஒருவேளை அது நடந்தால் அரசியலை விட்டு விலகத் தயார் : மீனவர்கள் மத்தியில் குமரி அதிமுக வேட்பாளர் அதிரடி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2021, 11:22 am
Thalavai Sundaram -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன் என அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் மீனவர்கள் மத்தியில் பேசினார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இன்று சின்னமுட்டம் , கன்னியாகுமரி, புதுக்கிராமம், வாவத்துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

அப்போது அவர் வாக்கு கேட்கும் விதமாக மீனவ மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நமது மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாத்திற்கு வந்த போது உறுதியளித்திருக்கிறார்.

ஆனால் எதிர் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இதை அரசியலாக்கி வருகின்றனர் .முதலமைச்சர் அறிவித்த படி கோவளத்தில் சரக்கு பெட்டக துறை முகம் வராது என்பது உறுதி. அப்படி ஒரு வேளை வந்தால் உங்களிடம் நான் இப்போது சொல்கிறேன். நான் அரசியலை விட்டு விலகி விடுவேன் .

அதேபோல் நான் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று வந்த பிறகும் சரக்கு பெட்டக துறைமுகம் வந்தால் நான் எம்.எல்.ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் என மீனவ கிராமங்களில் அதிரடியாக பேசினார். இதனால் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தின் இந்த பேச்சு குமரிமாவட்ட மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

Views: - 164

0

0