தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன் இதனை அண்ணாமலை கொச்சைப் படுத்துவோர் என எதிர்பார்க்க வில்லை என அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ,உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி திராவிடம் என்ற வார்த்தை 1800 களில் தோன்றியதாக அண்ணாமலை கூறுகிறார் ஆனால் திராவிட மாடல் என்பது திராவிட இயக்கமல்ல சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியபோதே தோன்றியதாக கூறி வருவதாகவும் அதனை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருவதாக குற்றச்சாட்டிய அவர் தமிழக முதலமைச்சர் கல்வியை உயர்த்துவதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
மத்திய அரசு புதிய கல்விகொள்கை என்று கூறுகிறார்கள் தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கை வளர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்து கொள்கையை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டுள்ளார், அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், தமிழ்நாட்டில் உயர்கல்வி என்பது உயர்ந்திருக்கிறது.
தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் துறைகளுக்கிடையே இன்டர் டிசிபிளைனரி என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டுமென ஆணையிட்டு இருக்கிறார், திராவிடம் வந்த பிறகுதான் எல்லாம் வந்ததாக கூறுகிறாரே அண்ணாமலை அந்த காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் கல்வி அறிவு பெற முடியாமல் பள்ளிக்குள்ளே நுழைய முடியவில்லை படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் ஒரு சமுதாயத்தினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றனர்.
அனைத்து சமுதாயத்தினரும் ஆண்களும் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டுமென்பது தான் திராவிடம் மாடல் என்றும் பிரதமரிடம் நிதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தான் அன்பாக கேட்டுக் கொண்டேன், அதனையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
மத்திய அரசு நான்காண்டுகளில் உயர்கல்விக்கு ரூ.6,664 கோடி தமிழகத்திற்கு வழங்கியதாக கூறுகிறார். தமிழக அரசு மட்டும் ஒரு ஆண்டில் உயர் கல்விக்கு செலவு செய்த தொகை 5 ஆயிரத்து 666 கோடி, இதுபோன்று கல்விக்கு அதிகளவு செலவு செய்து வருகிறோம்.
மொழிக் கொள்கைகளைப் பற்றியும், சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று தான் கேட்பதாகவும், பிரதமரிடம் நிதி உதவி கேட்கவில்லை இதனை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் அடித்தட்டு மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்று உழைப்பது தான் இந்த இயக்கம் என்றும் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு தான் இந்தியாவில் தமிழகத்தில்தான் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றுள்ளனர். இதனை அண்ணாமலை கொச்சைப்படுத்துவோர் என எதிர்பார்க்கவில்லை முருகனைப் போன்று பெரிய பதவிகளுக்கு அவரும் ஆசைப்படலாம் என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.