எனக்கு கோபி வேண்டாம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை கொலை செய்த பெண் : திருவள்ளூரில் பயங்கரம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோபி என்கிற கோபால கிருஷ்ணன் 27 என்ற இளைஞருக்கும் சிவன் கோவில் தெருவை சேர்ந்த திருமணம் ஆன பிரியா என்கிற பெண்ணுக்கும் முறை தவறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரியாவிற்கு சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கோபிக்கும் ப்ரியாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 13ஆம் தேதி பிரியாவின் கள்ளக்காதலன் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து திருஆயர்பாடியில் புளியந்தோப்பு தெருவிற்கு பிரியா மூலம் வரவழைத்து அவரது கண் முன்பாகவே சரமாரியாக வெட்டிவிட்டு கள்ளக்காதலன் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் அங்கேயே கோபாலகிருஷ்ணன் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் அளித்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குஅவர் உயிரிழந்தது தெரியவந்ததை தொடர்ந்து பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு பிரியாவை கைது செய்து அவரது கள்ள காதலன் சென்னையைச் சேர்ந்த ஆனந்த் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட நான்கு பேரை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் கொலையாளிகளை பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அஜித் குமார், சரத்குமார் வல்லவன் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்த நிலையில் எழும்பூர் பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்தனர் .
மேலும் தலைமறைவாக இருந்த வல்லவன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய இரண்டு கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.