“இளவரசியை விட்டு போகவே மனசில்ல“ : கொடைக்கானலில் கட்டுக்கடங்காத கூட்டம்!!

17 January 2021, 2:12 pm
Kodaikanal Crowd - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பொங்கல் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கொரோனா ஊரடங்கு ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த சில மாதங்கள் தான் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்கள். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு தற்போது பொங்கல் பண்டிகைக்கு தான் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

முக்கிய சுற்றுலாத் தலங்களாக இருக்கக்கூடிய மோய‌ர் சதுக்கம் , பைன் ம‌ர‌க்காடுக‌ள் ,குணா குகை, ஏரி சாலை ,பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் இருக்கக்கூடிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பசுமை போர்த்திய புல்வெளிகள் மற்றும் மேகங்களுக்கு நடுவில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்.

மேலும் தற்போது கொடைக்கானல் பகுதிகளில் சாரல் மழையும் பனிமூட்டம் தொடர்ந்து நிலவி வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இருந்தாலும் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு பனி மூட்டத்தில் பயணம் செய்வது ஒரு புது அனுபவமாக இருந்தது என்று தெரிவிக்கிறார்கள்.

Views: - 6

0

0