விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் – வைரலாகும் வடிவேலுவின் வீடியோ..!

13 September 2020, 3:10 pm
Quick Share

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு அவருக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையின் அடையாளமாக திகழும் வைகை புயல் வடிவேலுவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். ட்விட்டரில் #HappyBirthdayVadivelu #HBDLegendVadivelu #HBDVadivelu போன்ற ஹேஷ்டெகுகள் இந்திய அளவிலும் டிரெண்ட் ஆனது.

இது குறித்து இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் வடிவேலு, அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என தெரிவித்துள்ள வடிவேலு திரைப்படங்களில் அருமையான எண்ட்ரீயோட மீண்டும் வருவேன் என கூறியுள்ளார்.

அவரின் இந்த வீடியோவை ரீ ட்வீட் செய்தும், லைக் செய்தும் வரவேற்றுள்ள அவரின் ரசிகர்கள் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0