என் இனிய நண்பர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் – கமல்ஹாசன் ட்வீட்
Author: kavin kumar29 October 2021, 11:16 pm
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு இன்பார்க்ட் எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஜினி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோடிட் அர்ட்டரி ரீவேஸ்குலரைசேஷன் என்னும் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார்,” எனக் கூறினார்.இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
0
0