என்னை தூக்கி எறிந்தாலும் பந்து போல மீண்டும் உங்களிடம் வருவேன் : விஜய பிரபாகரன் உருக்கமான பேச்சு!!

Author: Udhayakumar Raman
25 August 2021, 9:18 pm
Quick Share

திருப்பூர்: தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் நடந்தது. இதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து விஜயபிரபாகரன் பேசியதாவது:- கேப்டனின் குரல் ஒலிக்கும் வரை அவருடைய குரலாக என் குரல் ஒலிக்கும். திருப்பூர் எப்பொழுதும் திமுகவின் கோட்டை. தேர்தலில் வெற்றி தோல்வி அனைத்து கட்சிக்கும் உண்டு. தோல்வியை வெற்றியாக்கும் திறமை எங்கள் கட்சிக்கு உண்டு. விஜயகாந்த், பிரேமலதா இருவரையும் சேர்ந்து விஜய பிரபாகரனாக நான் வந்திருக்கேன். 27 வயதில் நான் இங்கு நிக்க என் தந்தை காரணம். நீங்கள் என்னை தூக்கி எறிந்தாலும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்ப உங்களிடம் வருவேன். மக்கள் ஆசியுடன் கேப்டன் நலமுடன் இருக்கிறார். அனைவரும் தைரியமா இருங்கள். கேப்டன் விரைவில் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். மக்கள் நாயகன் கேப்டன் பழைய கம்பிரத்துடன் வருவார்.

அவருடைய பிறந்த நாளில் தேமுதிக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். எங்களுக்கு தேர்தலிலும் ஆதரவு தர வேண்டும் எங்களுக்கு. என் அப்பாவை போல நானும் எனது தம்பியும் அரசியல், சினிமாவில் சிறந்து வருவோம். இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். கேப்டன் 40 வருடம் சினிமாவிலும், 15 வருடம் அரசியலில் போராடினார். விருப்பு, வெறுப்புகளை தூக்கி வீசிவிட்டு அனைத்து நிர்வாகிகளும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். என் அப்பாவிற்காவே நான் அரசியலுக்கு வந்தேன். உங்கள் விட்டு பிள்ளையாய் வந்துள்ளேன் எனக்கு ஆதரவு கொடுங்கள். கொரோன காலம் என்பதால் அனைவரும் மாஸ்க் போடுங்கள், தடுப்பூசி போடுங்கள். 2006ல் இந்த கட்சி எப்படி இருந்ததோ மீண்டும் அப்படி கட்சி வர நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

Views: - 480

0

0