காவல்துறை மீது சட்டரீதியாக வழக்கு தொடர்வேன் : வீரப்பன் மகள் வித்யா ராணி…

20 October 2020, 4:16 pm
Veerappan Daughter - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : வீரப்பன் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த சென்ற குடும்பத்தினர் உட்பட 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவ்லதுறை மீது சட்டரீதியாக வழக்கு தொடர உள்ளதாக வீரப்பன் மகள் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் வீரப்பன் சமாதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற வீரப்பனின் 16-வது நினைவு நாள் நிகழ்ச்சியில், வீரப்பனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆதரவாளர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் கொளத்தூர் காவல் நிலையத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மகள்கள் வித்யாராணி, பிரபாவதி உள்பட 100 பேர் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரப்பனின் மகள் வித்யாராணி கூறியதாவது, எனது தந்தையின் 16-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் அவரது சமாதியில் நாங்கள் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினோம். எந்த இடத்திலும் 144 தடை உத்தரவை மீறவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டோம். ஆனால், எனது குடும்பத்தினர் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

போலீசார் உண்மைக்கு புறம்பாக விதிமுறைகளை மீறி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக உரிய தகவல்களை பெற்று, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

Views: - 47

0

0