உன்னை பாத்தா எனக்கு **** ஏறுது… மாசம் ரூ.50 ஆயிரம் தரேன் : இளம்பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கறிஞர்!!
கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண் . கடந்த 23 ஆம் தேதி ஒரு செல்போன் நம்பரிலிருந்து இளம் பெண்ணின் நம்பருக்கு போன் வந்தது.
அதில் ஆண் குரலில் பேசிய நபர், தனது பெயர் விஜய் ஆனந்த் என்றும், நாகர்கோவிலில் வக்கீலாக இருப்பதாகவும், இளம் பெண்ணின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், இளம்பெண்ணின் குடும்ப சூழ்நிலை அவருக்கு நன்கு தெரியும் என்றும் வீணாக கஷ்டப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அவரிடம் பல பெண்கள் பாலியல் தொழிலில் உள்ளனர் என்றும், இளம் பெண்ணையும் அவரது பாலியல் தொழிலில் சேர்ந்து கொள்ளும் படியும், மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை பெறலாம் என்றும், குடும்ப கஷ்டம் தீரும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இளம் பெண்ணின் மனதை மாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தார். மேலும் அந்த வக்கீல் இளம் பெண்ணிடம் பயப்பட தேவையில்லை. வெளியில் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்கிறேன்.
பாலியல் தொழிலுக்கு காவல்துறை வட்டாரத்தில் பெரிய அளவில் செல்வாக்கும் ஆதரவும் உள்ளது. வழக்கு போடப்பட்டாலும் நான் வக்கீலாக இருப்பதால் அதையும் எளிதில் முடித்துவிட முடியும் என்று கூறி இளம் பெண்ணின் குடும்ப கஷ்டத்தை தெரிந்து ஈடுபடுத்த முயற்சித்துள்ளார்.
அதற்கு அந்த இளம்பெண் திட்டி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்பு யாரோ அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து வருவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இளம் பெண் வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் வந்துள்ளது. ஹாய் , எப்படி இருக்க, உன்னை பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது , நீ பயப்படாதே நான் வக்கீல் எல்லா போலீசும் என்கையில். என்று மெசேஜ் அனுப்பியதுடன் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
திடீரென வீடியோ கால் செய்த வக்கீல் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் செய்கைகள் செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் வீடியோ அழைப்பை துண்டித்தார்.
தொடர்ந்து இது குறித்து அந்த இளம் பெண் கோவை கவுண்டம்பாளையம் போலீசில் இன்று காலை புகார் அளித்தார். இது குறித்து அந்த இளம் பெண் கூறும்போது, முதலில் புகார் அளிக்க வேண்டாம் என நினைத்திருந்தால் ஆனால் வக்கீல் விஜய் ஆனந்த் என்பவர் மீது ஏற்கனவே நாகர்கோவிலில் பல பாலியல் வழக்குகள் உள்ளதும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
அதனால் எனக்கு ஏதேனும் நடந்துவிடும் என்ற அச்சத்தில் புகார் அளித்துள்ளேன் என கூறினார். மேலும்,பல அப்பாவி பெண்களின் குடும்ப கஷ்டத்தை பயன்படுத்தி வக்கீல் விஜய் ஆனந்த் அவரது காம இச்சைகளை தீர்த்துக்கொள்வதுடன், அவரது சுயலாபத்திற்காக பல பெண்களை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார் என்பது தெரியவருகிறது.
எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வக்கீல் விஜய் ஆனந்தால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவதுடன், இனி வக்கீல் விஜய் ஆனந்தால் பெண்கள் பாதிக்காமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.