அதிமுக வெற்றியடைய உறுதுணையாக இருப்பேன் : ஜெ.,பிறந்தநாளில் சசிகலா சூளுரை!!!

24 February 2021, 11:35 am
Sasikala Tribute - Updatenews360
Quick Share

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்று வந்த சசிகலா, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். ஆனால் இன்று தனது தோழியும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், கொரோனாவில் நான் பாதிக்கப்பட்ட போது , கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் பிரார்த்தனையால் நலம் பெற்று தமிழகம் வந்ததாகவும், ஜெ.,வின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்ததில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என கூறிச் சென்ற ஜெயலலிதாவின் சொல்லை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என நம்புவதாக தெரிவித்த அவர், நான் எப்போதும் அதற்கு உறுதுணையாக இருப்பேன் என்றும், விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

Views: - 9

0

0