ஐஸ் கட்டி கரைவது போல் கொரோனாவும் கரைய வேண்டும். ஐஸ் கட்டி விநாயகர் செய்த தேனி இளஞ்செழியன்

21 August 2020, 10:31 pm
Quick Share

தேனி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் ஐஸ் கட்டியில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றனாது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி வருவதினால் விநாயகர் சதுர்த்தி அன்று திருவிழா நடத்தினால் அதிகளவு மக்கள் கூடும் இடங்களாக மாறி விட்டல் அதிக அளவு கொரோனா பரவிவிடும என காரணங்கள் இருப்பதினால் மக்கள் கூட்டம் அதிகளவு கூடுவதை தடுக்க வேண்டும் என்று முக்கியம் கருத்தின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சொல்வதும் பொது இடங்களில் வைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தும் விதமாக கூடலூரை சேர்ந்த காய்கனி சிற்பக் கலைஞரின் கைவண்ணத்தில் ஐஸ்கட்டிகளான ஆன விநாயகர் சிலையை உருவாக்கினார். இன்று தேனில் உள்ள சிக்கல்களைப் பற்றிய 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டியின் வாங்கிக்கொண்டு சுமார் அரை மணிநேரம் வரை ஐஸ்கட்டி விநாயகரை உருவாக்கி விநாயகர் சிலையாக செய்திக்கு ஐஸ்கட்டி விநாயகர் உருவாக்கினார். மேலும் ஐஸ் கட்டிகள் கலர் தந்திரமாக தெரிவதற்கு மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு தூள் கலந்த கலரை உருவாக்கி பனிக்கட்டி ஐஸ்கட் விநாயகரை உருவாக்கினார். மேலும் அவரிடம் சென்று கேட்டபோது, ஐஸ்கட்டி எவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் கரைகிரதோ அதே மாதிரி குறிப்பிட்ட நேரத்தில் கொரனோ தொற்றனாது அழிய வேண்டும் என அதனை வலியுறுத்தும் விதமாக இன்று ஐஸ்கட்டியினை கொண்டுவிநாயகர் சிலையை உருவாக்கினேன் என்று கூறினார்.

Views: - 27

0

0