தொழில்முனைவோர்களுக்கு உகந்த மாவட்டம் : கோவையில் உள்ள நிறுவனங்களுக்கு ஹேப்பி நியூஸ் கூறிய நிர்மலா சீதாராமன்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 2:08 pm
Cbe Nirmala -Updatenews360
Quick Share

கோவை : பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை போல் கோவை ஸ்டார்ட் அப் நகராமாக வளரும் நம்பிக்கை உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி’ சார்பில் தொழில் முனைவோருக்கு ‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது வழங்கும் விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவோம் 44 நிறுவனங்களுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுகளை வழங்கினார்.

இந்த விழாவில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
2021ம் ஆண்டு பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. நாட்டுநலனுக்காக சில இடங்களில் பொது துறை நிறுவனங்கள் இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார் துறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலை நோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது.

சின்ன, சின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு உகந்த மாவட்டம் கோவையாக உள்ளது. பெங்களூர், குருகிராம், ஹைதராபாத் போன்ற நகரங்கள் ஸ்டார்ட்அப் நகரங்களாக உள்ளன கோவையும் ஸ்டார்ட் அப் நகராக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் அகாடமி தலைவர் கார்த்திகேயன், எல்.எம். டபிள்யு தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 692

0

0