தஞ்சை கூட்டுறவு காலனி பகுதியில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைப்பெற்றது இதில் திரைப்பட பிரபல நடிகர் ஆனந்த் ராஜ் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் மாநகராட்சி மேயர் சன்ராமநாதன் உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்பு இந்த பல் மருத்துவமனையை திறந்து வைத்த பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- நான் அரசியல் பேச வேண்டாம் என நினைத்தேன் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சினிமா திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தது நான் தான் மூத்த கலைஞர் என நினைக்கின்றேன் எனக்கு முன்னால் இருந்த கலைஞர்கள் எல்லாம் தவறி விட்டார்கள்.
இன்னும் சிலர் இருக்கலாம் நான் அரசியலை விட்டு விலகி இருப்பதற்கு பல காரணம் உண்டு ஆனால் திரைப்பட கலைஞர்கள் அரசியலுக்கு வருவது என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
மேலும் என்னுடைய நண்பர் விஜய் அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவருடைய விருப்பம் அவர் அரசியலுக்கு வந்தால் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வரவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் என்னுடைய நல்ல நண்பர் அவர் நேற்று மேடையில் பேசியது அவர் அடுத்த கட்டம் எந்த இடத்திற்கு போகிறார் என்பது பற்றி இருக்கலாம்.
அரசியல் பொறுத்தவரை சில விஷயங்களை நான் தவிர்க்க விரும்புகிறேன் ஆனால் நான் அரசியலை பற்றி பேசினால் நிறைய பேசுவேன் முன்பெல்லாம் அரசியலைப் பற்றி முழுமையாக நான் கூர்ந்து கவனிப்பேன் ஆனால் இப்போது இந்த அரசியல் என்பது தலைக்கு மேல் போய்விட்டது
ஆதலால் எதையும் பற்றி பேசாமல் மென்று முழுங்குவது போல் இருந்து வருகிறேன் இது பேசினாலும் அடுத்தவர்களுக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அரசியலைப் பற்றி பேசுவதில்லை
ஒருவரை குறை சொல்லி பேசிவிட்டால் அது மற்றவர்களுக்கு சாதகமாகிவிடும் அதனால் தான் மிக பொறுமையாக இருக்கிறேன்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் இறப்பு பற்றி ஒன்று பேச விரும்புகிறேன் இந்த உயிரிழப்பு என்பது யாருக்குமே தெரியாது என்று நினைக்கிறீர்களா நான்கு பேர் குற்றவாளி என நிற்க வைக்கிறார்கள்
ஆனால் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வேற கட்சி சார்ந்தவர்கள் யாரும் இல்லையா கள்ளச்சாராயம் விர்கிறார்கள் என்று தெரிகிறது ஆனால் இவர்களெல்லாம் எங்கு போயிருந்தார்கள் இதனை நான் பொதுமக்கள் வாயிலாக கேட்கிறேன் நீங்கள் முதன்மை என்றால் உங்களுக்கு ஒரு பங்கு போகும் வேலை செய்யக்கூடிய ஆள் என்றால் அவருக்கும் பங்கு போகும் அதுபோல எல்லாம் இதில் உடன்பட்டு இருக்கிறார்கள்
ஆனால் இதனைப் பற்றி யாருக்கும் தெரியாது என சொல்கிறார்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் இந்த கள்ளச்சாராயம் தொடர்பான விஷயம் யாருக்குத் தெரியாது என்பதே என்னுடைய கேள்வி ஒரு ஊர் என்றால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இருப்பார்கள் அதில் யாரேனும் சொல்லி இருக்க வேண்டும் இதில் ஒருவரை குறை சொல்லி தப்பிக்கக்கூடிய வியாபாரம் அல்ல என்று நான் வெளிப்படையாக கூறுகிறேன் என்னிடம் மனதில் நிறைய இருக்கிறது வேண்டாம் என்ன பேச வைத்து விடாதீர்கள் என உணர்ச்சி மிகுந்து பேட்டி அளித்தார் .
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.