தமிழில் பேசவரவில்லை என்றால் மன்னிப்பே கிடையாது.. மொழி அரசியல் வேண்டாம் : ஆளுநர் தமிழிசை காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 6:19 pm
Tamilisai - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : மொழி அரசியலை செய்து கொண்டு இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழை வளர்ப்போம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்ததார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள எம்.வி. பேரடைஸ் தனியார் திருமண மண்டபத்தில் காந்தி பவுண்டேஷன் சார்பில் மண்ணும் மரபும் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் பாரம்பரிய உணவு மூலிகைசெடிகள், பழமையான இன்னிசை கருவிகள் வீட்டு உபயோக பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட கண்காட்சிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கை கூப்பி வணங்குவது உறவுகள் கை கொடுத்தது போன்றவற்றில் கொரோனா பண்பாட்டை மீட்டெடுத்ததில் பங்கு வகித்தது என்றும் துரித உணவு சிக்கன் 65 போன்றவற்றை உண்ணக்கூடாது என்றும் திண்டுக்கல் பிரியாணி, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய் போன்றவற்றை ரயில் நிலையங்களில் விற்கவும் காதியில் மாடல்களை ஏற்படுத்தி பல மடங்கு விற்பனையை செய்ய வைத்தவர் பிரதமர் என்று கூறினார்.

தொழிற்கல்வி நீட் தேர்வுக்கு உள்ளிட்ட அனைத்திலும் தமிழை பிரதமர் கொண்டு வரக்கூறுவதாகவும் ஆனால் மாநில அரசுகள் செய்ய மறுப்பதாகவும், எனது பெயரில் மட்டுமல்ல உயிரிலும் தமிழ் இருக்கிறது.

தமிழ் பேசவரவில்லை என்றால் அதற்கு மன்னிப்பே கிடையாது என்றும், தமிழுடன் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது தவறு இல்லை. எனது பேச்சினை இணையத்தில் குறை கூறுபவர்கள் அடையாளங்கள் இன்றி குறை கூறுகிறார்கள்.

படத்தை மொழிமாற்றம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். முதலில் உங்களை அடையாளங்களை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்றும் என் அளவிற்கு தமிழ் பேச முடியுமா வாருங்கள் என்னோடு மேடைக்கு என்றும் விமர்சனம் செய்பவர்கள், தமிழில் பெயர் இல்லாதவர்கள், தமிழ் பேசத் தெரியாதவர்கள் என்று விமர்சித்தார்.

வேர்களைத் தேடி மரபுகளை காப்பாற்ற வேண்டும் மொழியை காப்பாற்றுவதில் மொழியை கொண்டாடுவதில் நாம் தமிழர்கள் என்றும் பெருமை வாய்ந்தவர்கள். மொழி அரசியலை செய்து கொண்டு இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழை வளர்ப்போம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் வருமானவரித்துறை இயக்குனர் நந்தகுமார், திரைப்பட இயக்குனர் ரமேஷ் கண்ணா, வையாபுரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரிய கலைகளையும் கண்டு ரசித்தனர்….

Views: - 506

0

0