வாயில் டேப் சுற்றி இரு குழந்தைகள் அடித்துக் கொலை : பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்..!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 8:42 am
Quick Share

சோழவரம் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, அவரின் இரண்டு குழந்தைகளை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடி வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள இருளிபட்டில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த துவாரிகா பகார் என்பவர் மனைவி சுமத்ரா பகார் மற்றும் 4 வயது மகன் சிவா, ரீமா என்ற கைக்குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தனியார் தொழிற்சாலையில் துவாரிகா பகாருடன் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குட்டு (25) என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றினை எடுத்து தங்கி இருந்தார். இதில், துவாரிகா பகாரின் மனைவி சுமத்ராவுக்கும், குட்டுவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், சுமத்ரா பகார் தனது குழந்தைகளுடன், குட்டுவின் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சுமத்ராவுடன் வந்திருந்த இரு குழந்தைகளை வாயில் டேப்பினை சுற்றி அடித்து கொன்று விட்டு, அவரை கத்தியால் தலையில் வெட்டியுள்ளார்.

இதனால், சுமத்ரா கூச்சலிட்டதால் குட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
தகவல் அறிந்து சென்ற சோழவரம் போலீசார் இறந்த குழந்தைகள் இருவரின் உடலை
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தலையில் படுகாயம் அடைந்த பெண்ணை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கொலையாளி குட்டுவை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கள்ள காதலியை அரிவாளால் வெட்டிவிட்டு அவரின் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 139

0

0