கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னை அடித்து துன்புறுத்திய காவல்துறையில் பணியாற்றும் கணவர் மற்றும் கள்ளக்காதலி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 3 குழந்தைகளுடன் இளம்பெண் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தமிழ்நாடு காவல்துறையில் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சேடப்பட்டியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் அமிர்தவல்லி என்பவருடன் சம்பத்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக சம்பத்குமார் சரஸ்வதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றும் சம்பத்குமார் சேலத்தில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு வருவதாக கூறி அலுவலகத்தில் இருந்து விடுப்பு பெற்றுக் கொண்டு, வீட்டிற்கு வராமல் அமிர்தவள்ளியின் வீட்டிற்கு மட்டுமே செல்வதாகவும், இது குறித்து அமிர்தவள்ளியின் வீட்டிற்கு நேரில் கேட்கச் சென்றபோது, அவர்களுடன் சம்பத்குமாரும் சேர்ந்து சரஸ்வதியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக சரஸ்வதி தொளசம்பட்டி காவல் நிலையம், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், ஓமலூர் சரக துணை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ணனால் மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் மீறிய உறவால் குடும்ப செலவிற்கு கூட பணம் தராமல் அடித்து துன்புறுத்தும் கணவர் மற்றும் கணவரின் கள்ளக்காதலி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரஸ்வதி தனது 3 குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
This website uses cookies.