இரவு பகல் பாராமல் கள்ளச் சாராய விற்பனை ஜரூர்… வெட்ட வெளியில் சரளமாக நடக்கும் சாராய விற்பனை ; அதிர்ச்சி வீடியோ!

Author: Babu Lakshmanan
24 November 2022, 3:48 pm
Quick Share

வேலூர் ; சட்ட விரோதமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் கள்ளச் சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ரெட்டி மாங்குப்பம் ஆற்றாங்கரையோர பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டப்பகல் மற்றும் இரவு என இரண்டு வேலையும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கள்ளசாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கள்ளசாராய விற்பனையால் கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி சாராய ஊரல் மற்றும் மூலப்பொருட்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டும், மேலும் கள்ளச்சாராய விபாயாரிகளை கைது செய்து வரும் நிலையில், இது போன்று கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதனை காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கள்ளச்சாராய விற்பனை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Views: - 207

0

0