கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்கள் கைது ; கள்ளச்சாராயத்தை தடுக்க டாஸ்மாக் திறந்ததெல்லாம் பொய்யா..?

By: Babu
22 June 2021, 12:21 pm
thanjai dmk arrest - updatenews360
Quick Share

தஞ்சை ; தஞ்சை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேலமணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (53), தி.மு.க. வட்ட பிரதிநிதி. செல்வராஜ் (48) தி.மு.கவை சேர்ந்தவர். மேலும், இவர் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் உள்ளார். இவர்களின் நண்பர் கணேசன் (57). இவர்கள் மூவரும் சேர்ந்து அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பேராவூரணி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, 50 லிட்டர் அளவு கொண்ட பேரலில், 30 லிட்டர் சாராய ஊறலும், 100 லிட்டர் அளவு கொண்ட பானையில் 80 லிட்டர் ஊறலும், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட கேனில், 4 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார் சோதனை செய்த போது விஷதன்மையுடைய வாசம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து அய்யப்பன், செல்வராஜ், கணேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கள்ளச்சாராயம் தலைதூக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் இந்த விளக்கத்தை கொடுத்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், திமுக பிரமுகர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Views: - 255

0

0