இமானுவேல் சேகரனின் நினைவுதினம்: மதுரையில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

Author: Udhayakumar Raman
9 September 2021, 8:32 pm
Quick Share

மதுரை: இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு தினத்தன்று மதுரையில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 118

0

0