கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து : நல்லறம் அறக்கட்டளை சேவை!!
24 September 2020, 12:41 pmகோவை : கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை மற்றும் நல்லறம் அறக்கட்டளை இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் மூடப்பட்டு இருந்தன,தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில் நடைகள் திறக்கப்பட்டன.
இதனால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் வண்ணம் இருக்கின்றனர். இவர்களின் நலன் கருதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி சார்ந்த ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளை அறக்கட்டளையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல இன்று கோவை சாயிபாபா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை மற்றும் நல்லறம் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து 5ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரைகள் உட்கொள்ளும் முறை மற்றும் முக கவசம் கட்டாயம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.