“எந்த கட்சியில் சேர விருப்பமோ சேர்ந்துக்கோங்க“ : ரஜினி ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

18 January 2021, 12:10 pm
Rajini Fans - Updatenews360
Quick Share

ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வேறு அரசியல் கட்சியில் இணையலாம் என மன்றத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிபத்தாக இருந்த நிலையில், உடல் ஒவ்வாமை போன்ற காரணங்களால் தனது அரசியல் கட்சி ஆரம்பிக்கை முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.

மேலும ரஜினி ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்குள் வரவேண்டும் என அண்மையில் சென்னையில் தர்ணாவில் ஈடுபட்டு வலியுறுத்தினர். ஆனால் ரஜினி தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக மீண்டும் அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

Image

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மனற் உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என ரஜினிமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0