எச்சரிக்கை விடுத்தும் தீராத இச்சை.. பல பெண்களுடன் தகாத தொடர்பு : பெட்ரோல் ஊற்றி இளைஞர் உயிரோடு எரித்து கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 2:44 pm
Youth Murder -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : 6 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி உயிருடன் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி @ கோபிநாதன் (வயது 33). இவரை நாலூர் ஏரிக்கரை அருகே அடையாளம் தெரியாத 6 நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீயிட்டதாக தனது கைபேசி மூலம் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் சம்பவ இடம் சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுவதி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பெற்று வந்தவர் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த கோபிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலம் தகாத உறவினால் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் கொலை கும்பலை ஏவி உயிருடன் தீ வைத்து அவரை கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவர் உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Views: - 479

0

0