சசிகலா உடல்நிலை குறித்து வெளியான தகவல் : மருத்துவமனை அறிக்கை வெளியீடு!!

25 January 2021, 9:49 am
Sasikala Hospital- Updatenews360
Quick Share

சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில், திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் 20ம் தேதி சேர்க்கப்பட்டார்.

Ilavarasi News and Updates from The Economic Times

அங்கு, அவருக்குள்ள தைராய்டு, ரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நுரையீரல் தொற்று அறிகுறி தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில், அவருக்கு பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sasikala learned gardening, Kannada in prison: Lawyers | The News Minute

இதையடுத்து, சிடி ஸ்கேனுக்காக அவர் மீண்டும் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Sasikala may be released in January, 2021, says RTI reply - The Federal

இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது, சுயமாக உணவு எடுத்துக்கொள்வதுடன், உதவியோடு எழுந்து நடக்கிறார் என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

I-T department attaches assets belonging to VK Sasikala worth Rs 300 crore  under Benami Act- The New Indian Express

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள விக்டோரியா மருத்துவமனை, சர்க்கரை அதிகமாக உள்ளதால் இன்சுலின் வழங்கப்படுகிறது என்றும், தொடர் மருத்துவர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
…..

Views: - 0

0

0