சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம்: 22 சுரங்கப்பாதைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன..!!

Author: Aarthi Sivakumar
19 November 2021, 10:30 am
Quick Share

சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் மூடப்பட்டிருந்த 22 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, வட மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி பயன்படுத்த முடியாமல் இருந்தன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 154 இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

மேலும், கனமழை காரணமாக முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 153

0

0