கோவையில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக.. அண்ணாமலையால் அப்செட் ஆகும் பாஜக..!

Author: Vignesh
4 ஜூன் 2024, 12:32 மணி
annamalai-updatenews360
Quick Share

இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மற்றும் கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் கோவை தொகுதி பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 238 வாக்குகள் பெற்று பின்னரவை சாதித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 433 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

Annamalai

முன்னதாக அண்ணாமலைக்கு செல்வாக்குள்ள பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே பாஜக பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், அண்ணாமலை தான் போட்டியிட்ட கோவை தொகுதிகளிலும் பின்னடவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,21,411வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 82,653 வாக்குகளுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் அண்ணாமலை 50, 567 வாக்குகளை பெற்று இருக்கிறார். நட்சத்திர வேட்பாளராக கருதப்பட்ட அண்ணாமலை பின் தங்கிய நிலையில் இருப்பது பாஜகவினரிடையே அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாம்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 247

    0

    0