நீட் வரிசையில் ஜே.இ.இ தகுதித்தேர்வு: அச்சத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….கோவையில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 1:25 pm
Quick Share

கோவை: கோவையில் பொறியியல் கல்விக்கான தகுதித்தேர்வு அச்சத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் முருகன் (53). இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் தருண் சங்கர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

2 Students Die By Suicide In Tamil Nadu A Day Before NEET

மேலும் அங்குள்ள தனியார் அகாடமியில் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான ஜே.இ.இ தகுதி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அந்த அகாடமியில் நடைபெற்ற பயிற்சி தேர்வில் மாணவன் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவனின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சாய்பாபா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

JEE Main Result 2020: JEE Main answer key 2020 and JEE Main merit list 2020  date JEE Main 2020 cut offs | Higher News – India TV

ஏற்கனவே நீட்தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில் பொறியியல் கல்விக்கான தகுதித்தேர்வு அச்சத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 123

0

0