புதுச்சேரியில் ஒரே நாளில் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!

By: Aarthi
6 October 2020, 4:16 pm
coronavirus test - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,682 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் ஒரே நாளில் 390 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,614 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 4,522 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 41

0

0