கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தம்பதி: மனைவியின் இருசக்கர வாகனத்தை எரித்த கணவர்..!!

15 November 2020, 4:42 pm
Quick Share

புதுச்சேரியில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் மனைவியின் இருசக்கர வாகனத்தை கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சஞ்சய் காந்தி நகரில் குமரேசன் – சுஜாதா தம்பதியினர் வசித்து வந்தனர். சுஜாதா அழகு நிலையம் நடத்தி வந்த நிலையில் குமரேசன் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் மீண்டும் சேர்ந்து வாழும்படியும், மது அருந்த பணம் கேட்டும் அடிக்கடி சுஜாதாவிடம் தொந்தரவு செய்துள்ளார் குமரேசன். இந்நிலையில் சுஜாதா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்ற குமரேசன் வீட்டின் கீழ்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதனால், சுஜாதாவின் வாகனம் மற்றும் அருகில் இருந்த மேலும் 2 இருசக்கர வாகனங்களுக்கு தீ பரவி எரிந்து சாம்பலானது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமரேசனை தேடி வருகின்றனர்.

Views: - 21

0

0