வேறொரு பெண்ணுடன் தகாத உறவு : தட்டிக் கேட்ட மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்த கொடூரக் கணவன்!!

Author: Udhayakumar Raman
29 June 2021, 2:59 pm
Quick Share

தருமபுரி: ஏரியூர் அருகே தவறான உறவை கண்டித்த தனக்கு உடல் முழுவதும் 16 இடங்களில் சூடுவைத்து கொடுமைபடுத்திய கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார் மனு அளித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பழனிசாமி என்பவரின் மகன் பாண்டியன் என்பவருக்கும் பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் சஞ்சனா என்ற மகளும், 3 வயதில் பவன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முதல் மனைவி இறந்ததை மறைத்து கலைவாணியை திருமணம் செய்ததால் அதை அறிந்த கலைவாணிக்கும் அவரது கணவரான பாண்டியனுக்கும் அடிக்கடி குடும்ப தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தனது கணவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக பென்னாகரம் அடுத்த நெருப்பூரை சேர்ந்த ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமான கவிதா என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இதை தட்டி கேட்ட தன்னை வேறு பல ஆண்களுடன் தொடர்ப்புபடுத்தி தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி தனது தாய் வீட்டிற்க்கு துறத்தி விட்டார். பின்னர் ஊர் பொது மக்கள் சமாதானம் செய்து தன்னை கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது கணவர் பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள் தனக்கு வலுகட்டாயமாக குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமடைந்த செய்தனர்.

லேசான மயக்கத்தில் இருந்த நிலையில் தன்னுடைய கை, கால், மார்பகம் மற்றும் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு வைத்து துன்புறுத்தினார். அப்போது தனது அலரல் சத்தம் கேட்ககூடாது என்பதற்காக கை, கால்களை கட்டிவைத்தும், வாயில் துணி வைத்து இறுக்கமாக கட்டிவிட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றிய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், குழந்தைகளையும் கொண்று விடுவதாக மிரட்டினார்கள். எனது கணவர் வீட்டில் யாரும் இல்லாத போது எனது தாய் வீட்டிற்கு தப்பி சென்று எனது பெற்றோரிடத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்தேன்.

அதனை தொடர்ந்து தனது பெற்றோர்கள் தன்னை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும், இதுகுறித்து காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் பாண்டியன் அவரது பெற்றோர்கள் மற்றும் தகாத உறவு வைத்துள்ள கவிதா மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் தெரிவித்தார்.

Views: - 277

0

0