கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

20 January 2021, 9:24 am
Quick Share

கோவை:கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனின் இயேசு அழைக்கிறார் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதிலும் அவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன் இயேசு அழைக்கிறார் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களில் இந்த கூட்டம் மிகவும் பிரபலமானது. மேலும், கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தின் தாளாளராகவும் பதவி வகித்து வருகிறார் பால் தினகரன்.

இவரது தந்தை டிஜிஎஸ் தினகரன் தொங்கிய இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் மூலமாக பிரச்சார கூட்டம் நடத்தி வந்த நிலையில , அவரது வழியிலேயே பால் தினகரனும் பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் பால் தினகரனுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் அவினாசி சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

Views: - 4

0

0