தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை கிடு கிடு சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
8 January 2022, 10:19 am
Quick Share

திருப்பூர்: திருப்பூர் காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

கடந்த புரட்டாசி மாதத்தில் சாகுபடி செய்த தக்காளி மழையால் அழிந்தது. எனவே, தக்காளி வரலாறு காணாத விலை உயரவை சந்தித்தது. ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பயன் அடைய முடியவில்லை. இந்நிலையில், கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். அவை தற்போது காய்ப்புக்கு வரத்துவங்கியுள்ளது.
வெளியூரில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன், 13 கிலோ கொண்ட ஒரு டிப்பர் 800 ரூபாய்க்கும், இரண்டு நாட்களுக்கு முன் 500 ரூபாய்க்கும், நேற்று 350 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை சீசன் களைகட்டும். வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே, பொங்கலுக்குப் பின் மேலும் விலை சரியும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Views: - 521

0

0