கோவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பீதியில் மக்கள்
Author: kavin kumar24 November 2021, 9:25 pm
கோவை: கோவையில் இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை மாவடத்தில் கொரோனா வைர்ஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும் 100க்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி மாவட்டத்தில் இன்று 117 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 110 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 1259 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில், இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி இது ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, 2455 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து 49 ஆயிரத்து 514 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0