கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு : கேரள சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!

13 July 2021, 11:43 am
Kodai- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சென்றுவர முன்பு இ பாஸ் பெற வேண்டும் அல்லது இ பதிவு செய்து கொடைக்கானலுக்கு சென்று வர முடியும். தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

இதுதவிர கேரள மாநில சுற்றுலா பயணிகளும் கொடைக்கானல் நகருக்கு வந்து செல்கின்றனர். கேரள மாநிலத்தில் தற்போது ஜிகா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளை மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டுமென்று கொடைக்கானல் பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனை சாவடி உள்ளது. இந்த இடத்தில் மருத்துவக் குழுவினரை நியமித்து கேரள மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசும் மருத்துவத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 145

0

0