ஊராட்சி மன்றத் தலைவர்களின் மதிப்பூதியம் அதிகரிப்பு : தமிழக அரசு அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2021, 4:09 pm
TN Sec -Updatenews360
Quick Share

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன் படி ஊரக சாலைகள் ரூ.2097 கோடி மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளன.

12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும், ரூ. 33 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும், பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும் என்றும், சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

74வது இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்,1992ல் வழிவகுத்துள்ளது என்றும், அதன்படி, மாவட்ட திட்டக் குழு 36 மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும், இந்த குழுவானது, மாவட்டத்தின் தேவைகளையும், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட திட்டத்தினையும் அடிப்படையாக கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 235

0

0