கோவை, சென்னையில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய முழு நிலவரம்!!

Author: Udayachandran
30 July 2021, 9:04 pm
TN corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், நேற்றும் இன்றும் சராசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இன்று மீண்டும் 1,900க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 1,947 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,57,611ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 215 பேருக்கும், திருப்பூரில் 71 பேருக்கும், ஈரோட்டில் 171 பேருக்கும், சேலத்தில் 84 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,050 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,193 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 02 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 175

0

0