கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: சுற்றுலாத் தலங்கள் மூடல்….வெறிச்சோடியது நீலகிரி..!!

20 April 2021, 12:10 pm
nilgris restriction - updatenews360
Quick Share

நீலகிரி: கொரோனா பரவல் அதிகரிப்பால் நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடின.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான நீலகிரிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் உட்பட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவின் பேரில் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. கோடை சீசன் தொடங்கியுள்ளதால் களைகட்டிய சுற்றுலா தளங்கள் இன்று முதல் மூடப்பட்டதால், நீலகிரி, குன்னூர் ஆகிய சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாபயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் தேவை. அதனைக் கண்காணிக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய் துறை, காவல் துறையைக் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை தவிர அத்தியாவசிய தேவைகளுக்கு மற்றும் வணிக தேவைகளுக்கு வருபவர்கள் உரிய ஆவணங்களோடு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான அளவு உள்ளது. 1800 டோஸ் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 116

0

0