தமிழக ஆளுநருக்கு கொரோனா எதிரொலி..! சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து என அறிவிப்பு

3 August 2020, 10:01 pm
Quick Share

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் புரோகித்திற்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தமது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது  உடல் நிலையை தனியார் மருத்துவமனை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.

இந் நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்  அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை அறிவித்து இருக்கிறது.

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் முதலமைச்சர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இது வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் இப்போது, ஆளுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் வரும் 15ம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 8

0

0