திமுக, காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சிகள் என்பதற்கு INDIA கூட்டணியே உதாரணம் : பாஜக பிரமுகர் பரபரப்பு பேச்சு!!
திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வித்யாலயம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் மேற்பார்வையாளருமான கனகசபாபதி கலந்து கொண்டிருந்தார்.
கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம் பி யின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரொக்கம் கணக்கில் காட்டப்படாத பணமாக கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் , இதேபோல் தமிழகத்தில் கடந்து சில தினங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டதில் 1200 கோடி முறைகேடும் 68 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் , இவைகளே திமுக மற்றும் காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சி என்பதற்கு உதாரணம் என கூறினார்.
எனவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ள INDIA கூட்டணி என்பது ஊழல் நிறைந்த கூட்டணி மற்றும் குடும்பம் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளுடைய கூட்டணி எனவும் இதனை அப்புறப்படுத்தவும் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்கடிப்பதற்காக பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி இருப்பதாகவும் பேட்டி அளித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.