இப்படி ஒரு கதைக்களமா.. ? பிரமிக்க வைக்கும் பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படைப்பு.. புதிய தகவல்… !

Author: Rajesh
20 April 2022, 6:22 pm
Quick Share

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் உயர்ந்திருப்பவர் தான் இயக்குனர் ராஜமவுலி.. இவரது திரைப்படங்கள் பிரமாண்டத்தில் மட்டுமல்ல வசூலிலும் தொடர்ந்து இவரது படங்கள் சாதனைகளை செய்து வருகிறது.

அப்படி பாகுபலி படங்களின் வசூல் சாதனைகளை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் வெளியானது, எப்போதும் போல இந்த திரைப்படமும் உலகமுழுவதும் 1000 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனிடையே அடுத்து, பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படம் இதுவரை இல்லாதளவு மிக பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளது.

கிட்டத்தட்ட அப்படத்தின் பட்ஜெட் 500 கோடி இருக்கும் என்றும், அப்படம் புதையலை வைத்து மையமாக எடுக்கப்பட்ட படம் எனவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆப்பிரிக்கா காடுகளில் எடுக்கப்படவுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 610

1

0