ஆடாமல் அசையாமல் நின்றவரின் வாழ்கையை ஆட வைத்த கொரோனா! விஜிபி சிலைமனிதனின் சோகக் கதை!!
20 September 2020, 3:19 pmசென்னை ஈஞ்சம்பாக்கத் சேர்ந்த் தாஸ் என்பவர் பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி யுனிவெர்சல் கிங்டமில் சிலை மனிதனாக பணியாற்றி வந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் சிலை மனிதனாக பணியாற்றிய அவர், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் வரை பணியாற்றியதுதான் ஆச்சரியம்.
கிட்டதட் 30 வருடங்கள் சிலை மனிதனாக வாழ்ந்த தாஸ், தற்போது கொரோனா காரணமாக வீட்டிலும் சிலையாகவே உள்ளார். சிலை மனிதனாக பணியாற்றிய அவருக்கு ஆரம்பத்தில் 600 ரூபாய் சம்பளம் பெற்றார், தற்போது அவருடைய ஊதியம் 8 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது.
பூங்காவிற்கு வருவபவர்கள் சிலை மனிதனை சிரிக்க வைக்க படாதபாடு பட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாத அவர், பணியாற்றியது வரை சிலை மனிதனாகவே நின்றார். சிலை மனிதனாகவே மாறினார். எதற்கும் அஞ்சாமல் இருந்த அவரை ஆட வைத்துள்ளது இந்த கொரோனா.
காலை 9.30 மணிக்கு சிலை மனிதனாக மாறும் தாஸ் 4 மணி நேரம் சிலையாகவே இருந்தபின் உடைகளை மாற்றும் சாதாரண மனிதன் போல மாறிவிடுவதாக கூறுகிறார். கொரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் அதிகம் கூடும் பூங்காளங்கள் இயங்க அரசு தடை விதித்தது. இதையடுத்து பூங்கா மூடப்பட்டது.
வேலை இல்லாமல் கடந்த 5 மாதமாக வீட்டில் இருந்த தாஸ், தற்போது செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அனைவரையும் சிரிக்க வைக்க சிலையாக மாறிய தாஸ், ஆடாமல் அசையாமல் நின்று தற்போது அவரது வாழ்க்கையையே ஆட வைத்து விட்டது இந்த கொரோனா.