இந்த புதிய விதிமுறைகள் நேற்ற மே1 முதல் அமலுக்கும் வந்துள்ளது. முக்கியமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு..
இதுவரை 120 நாட்களுக்கு முன்பாக ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இனி 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
இதுவரை வெயிட்டிங் டிக்கெட் வைத்திருப்பகள் முன்பதிவு செய்யப்பட்ட 2ஆம் வகுப்பு படுக்கை அல்லது ஏசி படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்திருப்போம். ஆனால் இனி வெயிட்டிங் டிக்கெட் வைத்திருப்போர் unreserved பெட்டிகளில் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறினால் அபராதம் வசூலிக்கப்படும்.
ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்து வெயிட்டிங் என வந்தால் அது தானாகவே ரத்தாகிவிடும். அதற்காக நாம் செலுத்திய டிக்கெட் கட்டணத்தை நாம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் அல்லது இணையம் மூலமாக ரயிலில் டிக்கெட் பதிவு செய்பவர்கள் OTPஐ பயன்படுத்தியே புக் செய்ய முடியும். ஒரே IDல் பல டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்.
தட்கலில் டிக்கெட் புக் செய்பவர் தனது ஐடி மூலம் நாளொன்றுக்கு 2 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏசி வகுப்புகளுக்கு தட்கலில் புக் செய்ய வேண்டுமென்றால், காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு காலை 11 மணி முதல் மட்டுமே புக் செய்ய முடியும்.
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால், 75% பணம் திரும்ப கிடைக்கும். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கேன்சல் செய்தால், 50% டிக்கெட் பணம் கிடைக்கும்
24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Updatenews Udayachandran
My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…